டீ.ஆர் பாலு பிறந்தநாள்! கோடிக்கணக்கில் சொத்து மதிப்பு..எவ்ளோ தெரியுமா? - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு பிறந்தநாள் இன்று. டி.ஆர் பாலுவின் கோடிக்கணக்கான சொத்து மதிப்புகள் ஒரு பார்வை.

ஜூன் 15, 1941 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தள்ளிக்கோட்டையில் பிறந்த டி ஆர் பாலு தனது 16 வது வயதில் திமுகவில் இணைந்தார். அதன் பின்னர் கட்சியில் படிப்படியாக வளர்ந்து 1982 ஆம் ஆண்டு திமுகவின் சென்னை நகர மாவட்ட செயலாளர் பொறுப்பேற்றார். முதன் முதலில் 1986 ஆம் ஆண்டு திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 1996 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்தியில் பெட்ரோலியத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் டி. ஆர் பாலு திமுக தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்று வந்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி ஆர் பாலு திமுக நாடாளுமன்ற குழு தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.


டி.ஆர் பாலு சொத்து மதிப்புகள் பின்வருமாறு :


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக எம்பி டி.ஆர் பாலு தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த சொத்து விபரங்களை தேர்தல் ஆணையம் அப்போது வெளியிட்டது. அதன்படி தனக்கு ரூ.1.46 கோடி கடன் இருப்பதாகவும், சொந்தமாக ஒரு கார் கூட இல்லை எனவும் மனைவி பொற்கொடிக்கு ரூ. 6.60 கூடி கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ள்ளார்.

மேலும் டி ஆர் பாலு தனது முதல் மனைவியிடம் ஒரு கிலோ தங்கம், இரண்டாவது மனைவிடம் 100 சவரன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ. 16.31 கோடி என குறிப்பிட்டுள்ள டி ஆர் பாலு, தனது மனைவிகள் பெயரில் ரூ. 23.90 கோடி சொத்துக்கள் இருப்பதாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் வேட்பு மனு தாக்கலின்போது  தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Property Value in TR Balu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->