தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க கோரி பாதிரிகள், விசிகவினர் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில், தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க கோரி அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு மற்றும் தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை சார்பில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில், தேசிய திரு அவைகளின் ஆலோசனை கூடடமைப்பு ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் சுந்தர்குமார், ஆயர் கிறிஸ்டியன் சாம்ராஜ், ராஜ் மோகன் குமார், சி.எஸ்.ஐ. பிரின்ஸ் கால்வின், பிஷப் எட்வின் ஜெயக்குமார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ரவிசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். 

மத்திய அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு கமிஷன்கள் மற்றும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்.சி உரிமை வழங்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. 

இதனால், தலித் கிறிஸ்தவர்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக சபை வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு மற்றும் தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

protesting to include Dalit Christians in the SC list


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->