ஒன் சைடு கேம் ஆடுகிறது ஒன்றிய அரசு - குமுறிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்! - Seithipunal
Seithipunal


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையுடன் அறிவிக்கப்பட்ட ஹிமாச்சல் பிரதேச எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்ட நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் இன்னும் கட்டுமான பணிகள் கூட தொடங்காமல், ஒன்றிய அரசு ஒன்சைடு கேம் ஆடுகிறது என்று, தமிழக நிதிதுறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவிக்கையில், "பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டது. 

ஆனால், பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று திறக்கப்பட்டு விட்டது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு  இன்னமும் சுவர் கூட கட்டவில்லை. 

அரசியல் ரீதியாக ஒன்றிய அரசு ஒன் சைட் கேம் ஆடுவது போல தெரிகிறது. ஒன்றிய அரசு அரசியல் நோக்கத்துடன் தான் அனைத்தையும் செய்வதாக தெரிகிறது. 

மக்கள் நலனுக்காக எதையும் செய்வதாக தெரியவில்லை. மாநில அரசின் நிதியை அதிகமாக எடுத்துக்கொண்டு, எல்லா திட்டங்களுக்கும் 'பிரதான் மந்திரி' பெயரை வைத்து விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனை சரிசெய்ய வேண்டும்.

மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் குறித்து பிற மாநிலங்களில் என்ன விதமான தரவுத்தளம் (Database) உள்ளது. இதுபோன்ற திட்டத்தை எவ்வாறு எப்படி குழு அமைத்து செயல்படுத்துகிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்" என்று அமைச்சர் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PTR say about Madurai AIIMS and central govt


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->