பேனர் வைத்தவர்களிடமே, அதை அகற்றுவதற்கு வசூல் செய்யுங்கள் - சென்னை உயர்நீதிமன்றம்.!
puducherry cutout issue chennai hc order
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 24-ம் தேதி புதுச்சேரிக்கு வந்தபோது ஆயிரக்கணக்கான பேனர்கள் நகரம் முழுவதும் சட்டத்திற்கு புறம்பாக வைக்கப்பட்டது.
இது குறித்து புதுவை மாநிலம், கரிக்கலாம்பாக்கம் பகுதியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகனாதன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில்,
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு சட்டத்திற்கு புறம்பாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என்று முன்னதாகவே நகராட்சியிடம் புகார் அளித்துள்ளேன். ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஞானசேகரன், புதுச்சேரியில் பேனர் கலாச்சாரம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார்.
புதுச்சேரி நகராட்சி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் சட்டவிரோத பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதாக குறிப்பிட்டார்.
இருதரப்பு வாதங்களை அடிப்படையில் நீதிபதிகள், சட்டவிரோதமாக பேனர்களை வைத்தவர்களிடமே, அதனை அகற்றியதற்கான செலவை வசூலிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
English Summary
puducherry cutout issue chennai hc order