மஞ்சள் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.1000 - முதல்வர் ரங்கசாமியின் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, எம்.எல்.ஏ.க்கள் பலரும் திட்டங்களின் செயல்பாடு, வருவாய் குறித்த கேள்விகளை எழுப்பினர். இதற்குப் பதிலளித்த முதல்வர், 2025-26 ஆம் நிதியாண்டுக்காக ரூ.13,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு பாதிப்பில்லாமல் வரிகள் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அவரது உரையில், முக்கிய அறிவிப்புகள்:

* எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு.
* உயர் கல்வி உதவித்தொகை காலதாமதம் ஆனாலும், உரிய நேரத்தில் வழங்கப்படும்.
* சேதராப்பட்டில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான நிலம் மீண்டும் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டு, தொழில் நிறுவனங்களை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* ஐடி பூங்கா அமைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
* பிஆர்டிசியில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும், வருவாய் அதிகரிக்க வாய்ப்பு.
* ரொட்டிபால் ஊழியர்களின் ஊதியம் ரூ.10,000 இலிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்படும்.
* அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், முதியோர் உதவித் தொகை உயர்வு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 வழங்கும் திட்டம் தொடரும். சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 கிலோ * * * இலவச அரிசி, மஞ்சள் அட்டைக்கு 10 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என முதல்வர் உறுதியாக அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Puducherry Makalir Uthavi Thogai Announce


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->