அ.தி.மு.க இரட்டை இலை சின்ன விவகாரம்! டெல்லி உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக, அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தி சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.  

முன்னதாக, இந்த விவகாரத்தில் புதிதாக மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. 

ஆனால், புகழேந்தியின் மனுவில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையாளர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.  

இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் புகழேந்தி அளித்த மனுவை விரைந்து பரிசீலித்து தீர்வு காணும்படி தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு, புகழேந்தியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pugazhenthi case ADMK Simple Delhi HC Order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->