இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக போகும் புகழேந்தி.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையத்தின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டுமென முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி மனு அளித்திருந்தார். கடந்த 19ம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தில் புகார் ஆகியிருந்தார். 

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 26-ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் கூறியிருந்த நிலையில், இன்று மீண்டும் ஆணையத்தில் புகழேந்தி ஆஜராகிறார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 156 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது.

சசிகலா தரப்பு, அப்போலோ மருத்துவமனை தரப்பு விசாரணைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இறுதி அறிக்கையை விரைவில் தயார் செய்து தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pukazhenthi to appear before the arumugasami commission


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->