போதையில் தவெக நிர்வாகிகள் ஏற்படுத்திய விபத்து! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்! புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பு!
Puthukottai TVK Car Accident
புதுக்கோட்டை அருகே போதை விழிப்புணர்வு மாரத்தான் நடந்து கொண்டிருந்த பகுதியில், போதையில் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது.
தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த மாரத்தான் மலைக்கோட்டை பகுதி அருகே நடந்து கொண்டிருக்கின்ற போது, தமிழக வெற்றிக்கழக கட்சி கொடி கட்டிய கார் ஒன்று, இருசக்கர வாகனங்கள் மீது மோதி, நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதே சமயத்தில் விபத்தை ஏற்படுத்திய தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த மூன்று நிர்வாகிகள் மீது பொதுமக்கள் தர்ம ஆதி கொடுத்தனர்.
இதனால் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும், அவர்களை திருமயம் காவல் நிலையம் போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்து உள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Puthukottai TVK Car Accident