இந்தியா' கூட்டணி 'அக்னிபாத்' திட்டத்தை கிழித்து குப்பையில் வீசும் - ராகுல் காந்தி காட்டம்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பன்ஸ்கோன் நகரில் காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, "நாடாளுமன்ற தேர்தலில் ஒருபுறம் 'இந்தியா' கூட்டணியும், அரசியலமைப்பு சட்டமும் இருக்கின்றன. மற்றொரு புறம், அரசியலமைப்பு சட்டத்துக்கு முடிவுகட்ட விரும்புபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் 'இந்தியா' கூட்டணி, தனது இதயம், உயிர், ரத்தம் மூலம் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும்.

'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பு நீக்கப்படும். இடஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்படும். மேலும், 'இந்தியா' கூட்டணி அரசு, 'அக்னிபத்' திட்டத்தை கிழித்து குப்பைக்கூடையில் வீசும். ஆட்சியில் அமர்ந்தவுடன் நாட்டின் பொருளாதாரத்தை வேகமாக முன்னேற்றுவோம்.

பிரதமர் மோடி தன்னை பரமாத்மா அனுப்பி வைத்ததாக கூறி வருகிறார். அவரை அதானிக்கு உதவுவதற்குத்தான் கடவுள் அனுப்பி வைத்துள்ளார். ஏழைகளுக்கு உதவுவதற்கு அல்ல" என்று ஆவேசமாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragul gandhi speech election campaighn in uttar pradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->