அதிமுக கோட்டையில்.. களமிறங்கும் தேசிய தலைகள். வெளியான பரபரப்பு தகவல்.!
Rahul Gandhi campaign on April12
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வரும் ஏப்ரல் 12ஆம் தேதி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 9 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி பங்கேற்கும் பிரச்சார தேதிகள் ஒப்புதலுக்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டது.
அதன் அடிப்படையில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரத்திற்காக தமிழகம் வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் திருநெல்வேலி மற்றும் கோவை நாடாளுமன்ற தொகுதியில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கோவையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் ராகுல் காந்தி பிரச்சார பொதுக் கட்டத்தில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 10ம் தெறி பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆதரித்து கோயம்புத்தூரில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்பதை குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூரில் பிரதமர் நரேந்திர மோடியும் அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அடுத்தடுத்து பொதுக்கூட்டங்களில் பேச இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Rahul Gandhi campaign on April12