18 வயதில் திருமணம்... 26 வயதில் எம். பி. - ராஜஸ்தானின் பட்டியலினப் பெண் - யாரிந்த சஞ்சனா ஜாதவ்..?! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார் சஞ்சனா ஜாதவ் (26). மிக இளம் வயதில் எம் பி. யாகி இருக்கும் இவர் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவரான சஞ்சனா ஜாதவ், 18 வயதிலேயே திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கும் தாயாக உள்ளார். மேலும் தற்போது 26 வயதில் எம். பி. யாகவும் ஆகியுள்ளார்.

இதுகுறித்து சஞ்சனா ஜாதவ் தெரிவிக்கையில், "என் முதல் குழந்தைக்கு ஒரு வயதான போது தான் எம். எல். பி. படித்தேன். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்பும் நான் படிக்க காரணம் என் கணவரும், என் குடும்பமும் தான். அவர்கள் தான் என் குழந்தைகளை கவனித்துக் கொண்டதோடு என்னையும் படிக்க தூண்டினர். 

அரசியல் நுழைய வேண்டும் என்றெல்லாம் நான் துளி கூட நினைக்கல்லை. என் குடும்பத்தினர் மற்றும் கணவரின் தூண்டுதலில் தான் நான் தேர்தலில் போட்டியிட்டேன். எங்கள் தொகுதி பெண்களுக்காக ஒதுக்கப் பட்டிருந்தது. நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவள். 

என் சமுதாய மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டிய நிலையில் இருக்கும்போது என்னை, என் கட்சி இந்த உயரத்தில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. அதற்காக காங்கிரஸ் கட்சிக்கு எனது நன்றிகள். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மேடம் தான் என் அரசியல் முன் மாதிரி. என் சமுதாய மக்கள் இப்படிப்பட்ட தலைவர்களை நேரில் சந்திக்கவே முடியாது என்னும்போது எனக்கு அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை என்னால் மறக்கவே முடியாது" என்று சஞ்சனா ஜாதவ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan Congress Scheduled Caste Candidate Sanjana Jadhav


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->