ஜெயலலிதா குறித்து ராஜ்நாத் சிங் பேச்சு.! அதிமுக + பாஜக கூட்டணி.!! அப்போ அண்ணாமலை சொன்னது.? - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் பாஜக சார்பில் நடத்தப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டிலும் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகை தந்தார். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அமித்ஷா வேலூரில் நடந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசினார்.

தென் சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகளிடையே "தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக 25 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இதற்காக நிர்வாகிகள் உழைக்க வேண்டும்'' என அமித்ஷா பேசியதாக தகவல் வெளியானது. தமிழ்நாட்டில் பாஜக அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவில் 25 தொகுதிகளை பாஜக கேட்கிறதா? என்ற சந்தேகம் எழுந்தது

இதற்கு அதிமுக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில்  அதிமுக தான் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும் என அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் "அது அமித்ஷாவின் தனிப்பட்ட கருத்து" என தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக இடையே கருத்து மோதல்கள் நிலவி வருகிறது. அதிமுக 40 தொகுதிகளிலும் வெல்லும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி பாஜகவுக்கு பதிலடி கொடுத்தார். இந்த பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங் சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில் நடந்த பாஜகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது பேசிய அவர் "தமிழ்நாட்டில் பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது. அதிமுக தலைவியாக இருந்த ஜெயலயலிதா மீது மிகுந்த மரியாதை உள்ளது. கூட்டணி தர்மத்தின்படி அதிமுகவுக்கு மரியாதை, அங்கீகாரத்தை கொடுக்க தயாராக இருக்கிறோம்'' என தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரபல நாளேடுக்கு அளித்த பேட்டியில் "தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஊழலுக்காக தண்டிக்கப்பட்ட வரலாறு இருக்கிறது'' என பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மறைமுகமாக குறிப்பிட்டதாக கூறப்பட்டதால் அதிமுக, பாஜக நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேச தகுதியில்லை என அதிமுகவினர் சாடினர். இந்நிலையில் தான் ராஜ்நாத் சிங் ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை உள்ளதாக கூறியிருப்பது அதிமுக பாஜக இடையே இருக்கும் கருத்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிமுகவினர் அண்ணாமலை மீது எப்பொழுதும் கடுப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajnath Singh has said that he has respect for Jayalalitha


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->