மணிப்பூர் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை! எதிர்க்கட்சிகள் மீது பாய்ந்த ராஜ்நாத் சிங்!!
RajnathSingh accuses opposition parties dont caring about Manipur
இந்தியாவையே உலுக்கிய மணிப்பூர் கலவரம் மற்றும் வீடியோ விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற சபாநாயகரிடம் நோட்டீஸ் வழங்கி இருந்தன. இந்த நிலையில் மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் கோசமிட்டு மக்களவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
மக்களவையில் எழுந்த அமளிக்கு மத்தியில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் "மணிப்பூர் சம்பவம் நிச்சயமாக மிகவும் தீவிரமானது. நிலைமையை புரிந்துகொண்டு மணிப்பூரில் நடந்தது ஒட்டுமொத்த தேசத்தையும் அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது என்று பிரதமரே கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என அனைத்து கட்சி கூட்டத்தில் நான் கூறியிருந்தேன். மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்துகிறேன். ஆனால் ஒரு சில அரசியல் கட்சிகள் தேவையில்லாமல் மணிப்பூர் கலவரம் பற்றிய விவாதம் நடக்காத சூழ்நிலையை நாடாளுமன்றத்தில் உருவாக்க நினைக்கின்றன. எதிர்க்கட்சிகள் மணிப்பூர் மீது தீவிர அக்கறை காட்டவில்லை என்று நான் தெளிவாக குற்றஞ்சாட்டுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
English Summary
RajnathSingh accuses opposition parties dont caring about Manipur