2026 அதிமுகதான்! எத்தனை சேகர் பாபு வந்தாலும் மாறாது! அடித்து ஆடும் ஆர்.பி உதயகுமார்! - Seithipunal
Seithipunal


சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களின் கோபம் எதிரொலிக்கும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு முதலமைச்சர் தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டு அம்மா உணவகங்களை மூடி விடுவோம் என எதிர்க்கட்சிகள் புரளிகளை கிளப்பியதாக திமுக அமைச்சர்களை பாரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி கடந்த மூன்று ஆண்டுகளில் முதலமைச்சரோ, அமைச்சர்களோ, மேயரோ எவராகினும் நேரில் சென்று அம்மா உணவகங்களை ஆய்வு செய்தனரா என்று எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

இது குறித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்ததாவது, எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பதில் அளிக்க முடியாமல் அதிமுகவிலிருந்து ஆதாயம் தேடி திமுகவுக்கு சென்றவர்களை வைத்து அறிக்கை விட வைப்பது வாடிக்கையாக்கி உள்ளது. முதலமைச்சரின் நடவடிக்கையில் அதிமுக காணாமல் போய்விடுமோ என்ற பயம் எடப்பாடி பழனிச்சாமிக்கு வந்துவிட்டது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற புரட்சித்தலைவரின் வரிகளை சேர்த்து மேற்கொண்டு அரசியலில் வீரநடை போடுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. எத்தனை சேகர் பாபுகள் வந்தாலும் தமிழக மக்களின் மனதை மாற்ற முடியாது. வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களின் கோபம் எதிரொலிக்கும் என்று ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RB Udayakumar echoes the anger of the people of Tamil Nadu in the assembly elections


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->