மருத்துவத்துறை குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயார்!...இபிஎஸ்-க்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் சவால்!
Ready to discuss the medical sector face to face minister m subramanian challenges eps
திமுக ஆட்சியில் 41 மாதமாக மருத்துவத் துறை சீரழிந்து கிடப்பதாகவும், இது குறித்து குறித்து பல முறை எடுத்துரைத்தும் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது என்று, அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தது பேசினார். அப்போது பேசிய அவர், மருத்துவத்துறை சார்பான எந்த குற்றச்சாட்டுக்கும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உடன் நேரடியாக விவாதிக்கத் தயார் என்றும், இபிஎஸ் மட்டுமல்ல எத்தனை பேர் வந்தாலும் அவர்களுடன் அமர்ந்து மருத்துவத்துறை தொடர்பாக விவாதிக்கத் தயார் என்று கூறினார்.
மேலும், நேரத்தையும் இடத்தையும் நீங்களே முடிவு செய்து சொல்லுங்கள் என்று கூறிய அவர், டெங்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆண்டாக இந்த ஆண்டு உள்ளதாக தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், தேவராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த 6 வயது குழந்தை யாத்திகா, காய்ச்சல் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Ready to discuss the medical sector face to face minister m subramanian challenges eps