எதிர்க் கட்சிகள் தான்.. எதிரிக் கட்சிகள் அல்ல - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!
RSS Leader Mohan Bhagawat Speaks About political civilization
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதன் தலைவர் மோகன் பகவத், "தேர்தல் பிரச்சாரங்களில் ஒவ்வொரு கட்சியும், மற்ற கட்சிகளை மிகவும் நாகரிகமற்ற முறையில் மோசமாக விமர்சிக்கின்றன.
பொது வாழ்வில் அகங்காரமாக நடந்து கொள்ளக் கூடாது நாகரீகத்தைப் பேண வேண்டும். பிற கட்சியினரை புண் படுத்தக் கூடாது. தேர்தலுக்கென்று உள்ள ஒழுங்கு முறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் உள்ள நிலையில், அனைவரிடமும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று.
நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்குவதற்குத் தான் தேர்தல் நடத்தப்படுகிறது. இதன் மூலம் பெரும்பான்மை அடிப்படையில் அரசு தேர்ந்தெடுக்கப் படுகிறது. பெரும்பான்மை பெற்றுள்ள கட்சி எதிர்க் கட்சிகளை எதிரிக் கட்சிகளாக பாவிக்க கூடாது.
இன்னமும் நம் நாட்டிற்கு நிறைய சவால்கள் உள்ளன. மணிப்பூரில் பத்தாண்டுகளுக்கு முன்பு அமைதி நிலவியது. ஆனால் கடந்த ஓராண்டு காலமாக மணிப்பூர் மக்கள் அமைதிக்காக காத்திருக்கின்றனர் . மோடி அரசு இந்த விவாகரத்திற்கு முன்னுரிமை அளித்து மணிப்பூர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்" என்று மோகன் பகவத் கூறியுள்ளார்.
முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி, "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துப் பெண்களின் தாலியைக் கூட விட்டு வைக்காது. எல்லாவற்றையும் பறித்து முஸ்லிம்களுக்கு கொடுத்து விடும்" என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
RSS Leader Mohan Bhagawat Speaks About political civilization