பாஜகவின் அரசியல் விளையாட்டை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்..! - சஞ்சய் ராவத் ட்விட்..!!
Sanjay Raut tweet people will not tolerate BJP political game
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தனது மகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் இது வாரிசு அரசியலுக்கு வழிவகுக்கும் எனவும் கூறி அஜித் பவார் மற்றும் அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் 28 பேர் இன்று பாஜக கூட்டணியில் இன்று இணைந்தனர்.
பாஜக கூட்டணியில் இணையும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 29 பேரில் 9 பேருக்கு ஆளும் மகாராஷ்டிரா அரசில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டார்.
ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இருந்து வரும் நிலையில் தற்பொழுது அஜித் பவாருக்கும் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு துணை முதல்வராக இருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பதை குறிப்பிடத்தக்கது
இந்த விவகாரம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் உத்தவ் தாக்ரே அணி சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் "மகாராஷ்டிரா அரசியலை சுத்தப்படுத்தும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்கள் வழியில் செல்லட்டும். நான் திரு.சரத் பவாருடன் இப்போதுதான் பேசினேன். அவர் "நான் வலிமையானவன். எங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. உத்தவ் தாக்கரேவுடன் மீண்டும் அனைத்தையும் மீண்டும் உருவாக்குவோம்" என்றார். ஆம், இந்த விளையாட்டை மக்கள் நீண்ட காலம் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
English Summary
Sanjay Raut tweet people will not tolerate BJP political game