சுயநலத்திற்காக அதிமுகவை கூறு போட நினைக்கிறார்கள்.. தொண்டர்கள் மத்தியில் வேதனையில் பேசிய சசிகலா.!!
sasikala says about admk issue july 08
விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியில் சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தல் அளித்தனர். அதை எடுத்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, திருச்சிற்றம்பலம் மூன்று முனை சந்திப்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, பல அடக்குமுறைகள் இருந்த போதும் அம்மாவும், நானும் சேர்ந்து கழகத்தை கட்டி காத்த உள்ளோம். அம்மாவிடம் இருந்த என் நட்பு புனிதமானது. அம்மா என் மீது வைத்திருந்த அன்பு இந்த உலகத்தில் உள்ள யாரும் வைத்திருக்க முடியாது.
என்னை அம்மாவிடமிருந்து பிரிக்க நிறைய பேர் சூழ்ச்சிகளை செய்தார்கள். அதையெல்லாம் முறியடித்து சாதனை படைத்து, தொடர் வெற்றிகளை கண்ட கழகம், இன்று தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இது போன்ற நிகழ்வுகள் வேண்டாம் என்றால் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்த திமுக ஆட்சிக்கு எதிராக நாம் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தார்களே, அந்த திமுக ஆட்சியை கூட எதிர்க்க ஆளில்லை. சுயநலத்திற்காக சிலர் கட்சியை கூறு போட நினைக்கிறார்கள். இது தொண்டர்கள் மத்தியில் வெறுப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
sasikala says about admk issue july 08