முதல்வருக்கே இந்த நிலையா? சாட்டை துரைமுருகனால் தலைகுனிந்து நின்ற தமிழக போலீஸ்., சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த சாட்டை துரைமுருகனின் ஜாமீனை ரத்து செய்யவேண்டும் என்ற தமிழக அரசின் வழக்கில், தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

நீதிமன்ற உத்தரவுபடி சாட்டை துரைமுருகன் பேசியதை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கும்படி ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்காத காரணத்தினால் நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்து, சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

யூடியூபர் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளரான சாட்டை துரைமுருகன், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து யூடியூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதன் காரணமாக தமிழக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த துரைமுருகன் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்த தமிழக போலீசார், அவரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை இன்று வந்தபோது, தமிழக காவல்துறை எழுத்துப்பூர்வமாக சாட்டை முருகன் பேசியதை சமர்ப்பிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் காவல்துறைக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில்,

ஒரு தமிழக முதல்வரை தவறாக விமர்சித்துள்ளார்., அதனை எழுத்துப்பூர்வமாக காவல்துறையை சமர்ப்பிக்க கூறியிருந்தோம்., அதிகாரிகள் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

ஒரு முதல்வருக்கு இந்த நிலை என்றால்., சாதாரண மக்கள் நிலை என்ன? 

இந்த மனுவைத் தள்ளுபடி செய்தால் என்ன? என்றும் நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர். அப்போது அரசு தரப்பில் ஒரு வார காலம் அவகாசம் கேட்டனர். இதையடுத்து நீதிபதிகள் ஒரு வார கால அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sattai duraimurugan case dec14


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->