இந்தியாவையே அதிரவிட்ட சனாதன சர்ச்சை! உச்ச நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


சென்னையில் கடந்த செப்டம்பர் 2ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளராக சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதான ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதான தர்மத்தை டெங்கு, மலேரியா, கொசு போன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசினார். 

இந்த மாநாட்டில் தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்ட நிலையில் அவர் முன்பே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசியது நாடு முழுவதும் பெறும் சர்ச்சையை கிளப்பியது. சனாதனம் குறித்து திமுக அமைச்சர் பேசியதற்கு எதிராக பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இந்த மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டது அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என அறிவிக்க கோரியும், இந்த மாநாட்டை நடத்திய அமைப்பின் பின்னணி மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உள்துறை அமைச்சரகத்திற்கு உத்தரவிட கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோன்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபுவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கானது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீங்கள் ஏன் முதலில் உயர் நீதிமன்றத்தை நாடவில்லை என மனுதாரரை நோக்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஏற்கனவே மத வெறுப்பு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருவதால் இந்த மனுவையும் இணைத்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது.

இதனை அடுத்து மனுதாரரின் வாதத்தை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC orders to TNgovt respond to Udayanidhi Sanatan issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->