கருணாநிதியின் பேனா நினைவு சின்னம்! சட்டப்போராட்டம் நடத்தப்படும் - சீமான் அறிவிப்பு!
Seeman Condemn Karunanithi pen statue law protest
மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை கடுமையாக எதிர்ப்பதாக சீமான் சற்று முன்பு தெரிவித்துள்ளார்.
மேலும், கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்த்து, நாம் தமிழர் கட்சி சட்ட போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல்.
சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது.
மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனைக் எடுத்துக் கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தினை ஒன்றிய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மக்கள் விரோத - சூழலியல் விரோத இத்திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்க உள்ளது" என்று சீமான் அறிவித்துள்ளார்.
English Summary
Seeman Condemn Karunanithi pen statue law protest