கைய, கால உடச்சுடுவன்! சீமான் மீது புகார் அளிக்க சென்றவர்களை அடிக்காத குறையாக மிரட்டி அனுப்பிய போலீசார்! - Seithipunal
Seithipunal



பெரியார் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்க சென்ற திராவிட விடுதலை கழக நிர்வாகிகளை அடிக்காத குறையாக போலீசார் மிரட்டி அனுப்பியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து திராவிட விடுதலை கழக செய்திக்குறிப்பில், "நேற்று நன்பகல் சீமான் மீது நடவடிக்கை எடுக்ககோரி வேலூர் மாவட்ட காவல் காண்கானிப்பாளர் அலுவலகம் தோழர் சிவா, தோழர் திலிபன், தோழர் சதிஷ், தோழர் அமல்ராஜ்  சென்றிந்தோம். 

புகார் மனுவை வரவேற்ப்பு அறையில் கொடுத்துவிட்டு  மாவட்ட கண்காணிப்பாளரை சந்திக்க சுமார் ஒரு மணிநேரத்திற்க்கு மேலாக காத்திருந்த நிலையில் காவலர்கள் திடிர்னு வந்து உங்கள் புகார் சைபர் கிரைம்க்கு அனுப்பிட்டோம் நீங்க போங்க என்றனர். 

நீண்டநேரம் காத்திருக்கிறோம் SP யை நேரில் பார்த்துவிட்டு செல்கின்றோம் என்றோம். உடனே Asp மிக கடுமையாக எங்களிடம் நடந்துகொண்டார். உடனே SP அழைத்தார். 

அங்கு இன்னும் மிக மோசமாக என்னையும், தோழர் திலிபனையும் ஒருமையில் பேசினார். கைய கால உடச்சுடுவன், என் ரவுடிசம் பன்றிங்களா? இங்கிருந்து வெளியே போகமாட்டிங்க,உடனே அடிச்சி ரிமான்ட் பன்னிடுவன் என்று மிக கடுமையாக பேசி மிரட்டினார். 

அதுமட்டுமல்ல இரண்டு முறை அடிக்கவும் முற்பட்டார்.  Sp இது அரசியல் பிரச்சனை இது பொது பிரச்சனை அல்ல. போய் கடலூரில் புகார் கொடுங்க.இங்க எதுக்கு கொடுக்கிறிங்கனு உதாசினப்படுத்தி பேசினார். 

என்னையும் தோழர் திலிபனையும் மிக கீழ்தரமாக நடந்தி அவமானபடுத்தி மிரட்டிய. வேலூர் ASP மீது  தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க தலைமை ஆவணம் செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman Issue Periyar TVK Complaint tn police


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->