“சந்திச்சா சொல்லப்போறேன்; எனக்கென்ன பயமா? சீமான் பரபரப்பு பேட்டி!
Seeman Nirmala Sitharaman not meet in chennai BJP NTK
2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் எனக் காலங்களாகவே அறிவித்து வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது ஒரு புதிய அரசியல் சந்திப்பின் வாயிலாக மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
சென்னையின் நட்சத்திர ஓட்டலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் சீமான் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. திமுகவுக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்க விரும்பும் பாஜக, சீமானை தனது கூட்டணிக்குள் கொண்டு வர விருப்பம் கொண்டுள்ளதாகவும், அதற்கான முதல் கட்ட முயற்சியாகவே இந்த சந்திப்பு அமைந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் விவரிக்கின்றன.
இந்நிலையில், “சந்திச்சா சொல்லப்போறேன்; எனக்கென்ன பயமா? தயக்கமா?” என சீமான் கூறியுள்ளதால், அவர் இந்த சந்திப்பு நடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக, நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர்ச்சியான சந்திப்புகள், அதிமுக -பாஜகவின் எதிர்கால தேர்தல் கூட்டணிகளுக்கான நகர்வுகளாகவே பரிசீலிக்கப்படுகின்றன.
English Summary
Seeman Nirmala Sitharaman not meet in chennai BJP NTK