பரபரப்பு!...மும்மொழிக்கொள்கையை ஏற்க மத்திய அரசு தொடர் அழுத்தம்!...அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம், சூலூர் வட்டம் பள்ளபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நம்ம ஊரு  திட்டத்தின் கீழ் 6 புதிய வகுப்பறை கட்டடங்கள் மற்றும் மாணவர்களுக்கான 2 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இக்கட்டடங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். முன்னதாக, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான  பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் தருகின்றனர் என்றும்,  மத்திய அரசின் கட்டளைகளை ஏற்றால் மட்டுமே நிதி ஒதுக்குவோம் எனக்கூறுவதை ஏற்க முடியாது தெரிவித்த அவர், மத்திய அரசு நிதி வழங்காததால் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை வழங்க முடியவில்லை என்று குற்றம் சாட்டினார்.

மேலும், முதல் தவணைக்கான தொகையான 573 கோடி ரூபாய் இன்னும் வரவில்லை என்று கூறிய அவர்,  அந்த தவணைக்கான ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மொத்தம் 32 ஆயிரத்து 298 பேருக்கான சம்பள தொகையை நாங்கள் மாநில நிதியில் இருந்தே கொடுத்துக்கொள்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாகவும், மாநில அரசுக்கு வழங்கவேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்த அவர், இந்த  முயற்சியை கைவிடப்போவதில்லை என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sensation entral government continues to pressurize to accept trilingual policy minister anbil mahesh poyyamozhi accused


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->