கவரப்பேட்டை ரயில் விபத்தில் சிக்கப் போவது யார்?...இன்று மேலும் 10 பேருக்கு சம்மன்!
Who is going to get involved in the kavarappettai train accident 10 more people have been summoned today
நடப்பு மாதம் 11-ம் தேதி பாக்மதி விரைவு ரெயில் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்தது. தொடர்ந்து அந்த ரயில், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்த நிலையியில், சிக்னல் கோளாறு காரணமாக ரெயில் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட் உள்ளிட்ட 16 பேரை விசாரணைக்கு ஆஜராக ரெயில்வே துறை சார்பில் ஏற்கெனவே சம்மன் அனுப்பி உள்ளது.
மேலும், விபத்து நடந்த பகுதியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய ஆய்வில், தண்டவாளத்தில் உள்ள போல்ட்டுகள் மற்றும் பிராக்கெட்டுகள் கழற்றப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில் கவரப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக மேலும் 10 பேருக்கு ரெயில்வே போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அந்த வகையில், சிக்னல், என்ஜினியர் துறையைச் சேர்ந்த 10 பேர் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
English Summary
Who is going to get involved in the kavarappettai train accident 10 more people have been summoned today