அமலாக்கத் துறையை ஏவி விடும் பாஜக?...ஜல்ஜீவன் திட்ட முறைகேட்டில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஜனவரி 5-ம் தேதியுடன் அங்கு சட்டசபை பதவி காலம் முடிவடைவதை யொட்டி, நவம்பர் 2-வது அல்லது 3-வது வாரத்தில் ஜார்க்கண்டில் சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் மத்திய அரசின்  ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தை அமல்படுத்துவதில் முறைகேடு மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

மேலும், ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் மிதிலேஷ் குமாரின் செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி மணீஷ் ரஞ்சனுக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அதேபோல ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் இந்த சோதனையை அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

ஜார்க்கன்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில்,அங்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp will the enforcement department in more than 20 locations in the jaljeevan project fraud


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->