ஜாமீனுக்காக அலையும் செந்தில் பாலாஜி! பந்தாடும் நீதிமன்றங்கள்! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற குழப்பம் கடந்த சில நாட்களாக நீடித்து வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை முதலில் விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டதற்கு முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் நாடுமாறு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி முன்பு ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட போது சிறப்பு நீதிமன்றமே ஜாமீன் மனு மீதான முடிவை எடுக்கும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இது எந்த நீதிமன்றம் விசாரணை நடத்துவது என்பது குறித்த முடிவெடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வின் முன்பு செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் இளங்கோ முறையிட்டார். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையின் போது நீதிபதி சக்திவேல் விலகிய நிலையில் இந்த மனுவை எவ்வாறு ஏற்பது என நீதிபதி சுந்தர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு விளக்கம் அளித்த செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் இளங்கோ மாற்று அமர்வு இன்று விடுமுறை என்பதால் இந்த அமர்வின் முன்பு முறையிட்டதாக இளங்கோ தெரிவித்தார். மேலும் நிர்வாக ரீதியிலான உத்தரவை பிறப்பித்தால் கூட போதும் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் இளங்கோ கோரிக்கை வைத்தார்.

ஜாமீன் மனு யார் விசாரணை செய்வது என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என தெரிவித்த நீதிபதி சுந்தர், இந்த ஜாமீன் வழக்கு குறித்து தலைமை நீதிபதியிடம் முறையீடுகள் என அறிவுறுத்தினார்.

ஆனால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளை விசாரித்து வருவதால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வரும் திங்கட்கிழமை சென்னை திரும்ப வர என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு தலைமை நீதிபதி அமர்வின் முன்பு முறையீடு செய்ய முடியும்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கில் மாற்று அமர்வாக அறிவிக்கப்பட்ட நீதிபதி சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வு நாளை செயல்படும் பட்சத்தில் அந்த அமர்வின் முன்பு செந்தில் பாலாஜி தரப்பு ஜாமின் மனு விசாரணை குறித்து முறையிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SenthilBalaji bail plea was directed to appeal to Chief Justice


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->