ஆளுங்கட்சிக்கு இருக்கு..கிழித்து தொங்கவிடுவேன்.. ஜாமீன் கிடைத்த சூட்டோடு எஸ்.ஜி சூரியா ஆவேசம்..!! - Seithipunal
Seithipunal


மதுரை தொகுதி எம்பி வெங்கடேசன் குறித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறு கருத்துகளோடு அறிக்கை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாநகர காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை இரவு மதுரை சைபர் கிரைம் போலீசார் சென்னையில் உள்ள அவரது வீட்டில் எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று காவல்துறை கோரிய வழக்கில் நேற்று மதுரை மாவட்ட முதலாவது நீதிமன்றத்தில் எஸ்.ஜி சூர்யா ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சூர்யாவின் பதிவு இரு சமூகத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார். அதேபோன்று காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி டீலாபானு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யாவிற்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். ஜாமீன் உத்தரவில் 30 நாள்களுக்கு தினமும் காலை 10 மணிக்கு மதுரை சைபர் கிரைம் போலீஸில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக வழக்கறிஞர்கள் சூர்யா மீது திமுக அரசு தொடுத்த பொய் வழக்கில் நீதி கிடைத்துள்ளது என கருத்து தெரிவித்திருந்தனர். நீதிமன்றத்தின் விசாரணைக்கு பிறகு காவல்துறையினர் வாகனத்தில் ஏறும் பொழுது பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா "ஆளுங்கட்சிக்கு இருக்கிறது, கிழித்து தொங்கவிடுவேன்" என குரல் எழுப்பியவாறு வாகனத்தில் ஏறினார்.

இதன் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்த நிலையில் நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் அடிப்படையில் இன்று காலை எஸ்.ஜி சூர்யா விடுதலை ஆகியுள்ளார். அவரை பாஜக நிர்வாகிகள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். விடுதலையான கையோடு மதுரையில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ சிதம்பரம் பிள்ளை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SG Surya said he will not leave the ruling party alone


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->