திடீரென எதிரணியில் இருந்து ஆளும்கட்சி அணிக்கு தாவிய எம்பி.. வழங்கப்பட்ட அமைச்சர் பதவி.!! - Seithipunal
Seithipunal


இலங்கையில் தற்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை கூட விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்தது. இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து, அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்தார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் பொதுமக்களின் கிளர்ச்சி வெடித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், சுயாதீன அணியில் இருந்து திடீரென இலங்கை அரசுக்கு ஆதரவாகத் எம்.பி சாந்த பண்டார தாவினார். இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்து இராஜாங்க அமைச்சர் பதவியை பெற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shantha bandara support srilanka govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->