#BigBreaking || ஆட்சியை காப்பற்ற உச்சநீதிமன்றம் ஓடிய சிவசேனா.!
shiv sena appeal to SupremeCourt
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேர் அசாம் தலைநகர் கவுஹாத்தியில் உள்ள சொகுசு நட்சத்திர ஹோட்டலில் தங்கி ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் தலைமையாக உள்ள ஏக்நாத் ஷிண்டே தமக்கு சுயேட்சைகள் உள்பட 50 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை பாஜகவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். விரைவில் சட்டமன்றத்தைக் கூட்டி உத்தரவு தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் பகத் சிங் கொஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டுள்ளார். நாளை நடைபெறும் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவசேனா கட்சியின் தலைமைக் கொறடா சுனில் பிரபு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
(மகாராஷ்டிரா சட்டமன்ற கூட்டத்தொடரில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க போவதாக ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். மேலும், அவருடன் 50 எம்.எல்.ஏக்களும் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது)
English Summary
shiv sena appeal to SupremeCourt