சிவசேனாவின் வில் அம்பு சின்னம் முடக்கம் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை!
shiv sena simple ban EC
மகாராஷ்டிர ஆளுங்கட்சியாக இருந்த சிவேசானா, குடும்ப அரசியலை எதிர்த்து அக்கட்சியில் உள்கட்சி மோதல் உண்டானது. இதில், கட்சி இரண்டாக பிரிய, 41 எம்எல்ஏ.,க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒன்றிணைந்தனர்.
தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டேவுக்கு பாஜக ஆதரவு கரம் நீட்டியதுடன், கூட்டணி வைத்து ஆட்சியையும் அமைத்தது. கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி, ஷிண்டே மகாராஷ்டிர முதல்வராகவும், தேவேந்திர ஃபட்னாவிஸ் (பாஜக) துணைத் தலைவராகவும் பதவி ஏற்று கொண்டனர்.
இதற்கிடையே, சிவேசானா கட்சியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில், மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி 'தாங்கள் தான் உண்மையான சிவசேனா' என்று அங்கீகரிக்கவும், அக்கட்சியின் 'வில் அம்பு' சின்னத்தை ஒதுக்கக் கோரியும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடத்த, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
மேலும், ஏக்நாத் ஷிண்டேவின் மனு மீதான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க கோரிய உத்தவ் தாக்கரே அணியின் மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சிவசேனாவுடைய தேர்தல் சின்னமான விம் அம்பை முடக்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கையெடுத்துள்ளது.
இதன் காரணமாக உத்தவ் தாக்ரே, ஏக் நாத் சிண்டே ஆகிய இரண்டு பிரிவினரும் சிவசேனா கட்சியின் பெயரையும் சிவசேனா கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.