கர்நாடக முதல்வர் யார்..? காங்கிரஸ் தலைமைக்கே அதிகாரம்.. டெல்லிக்கு புறப்படும் சித்தாராமையா, சிவகுமார்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தல் முடிவு நேற்று வெளியான நிலையில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று தனி பெரும்பான்மை பெற்றுள்ளது. எனினும் கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற போட்டி முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சிவக்குமார் இடையே நிலவி வருகிறது.

இந்த நிலையில் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த மாலை 6 மணிவே அளவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 135 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் 2 காங்கிரஸ் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.

கூட்டம் நடைபெற்ற ஓட்டலுக்கு முன்பு சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆதரவாளர்கள் திரண்டு இருவருக்கும் ஆதரவாக கோஷம் எழுப்பினர். மேலும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சித்தராமையா மற்றும் சிவகுமார் இருவரும் முதல்வராக தங்களை தேர்வு செய்யுமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் பெங்களூர் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் டெல்லி தலைமைக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் நாளை அல்லது நாளை மறுநாள் கர்நாடக மாநில முதலமைச்சருக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அனைத்து துறைகளுக்கான அமைச்சர்களையும் டெல்லி தலைமையே தேர்வு செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நாளை கர்நாடக மாநில முதல்வர் போட்டியில் இடம் பெற்றுள்ள முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் டி.கே சிவகுமார் ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர்.

டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இருவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டி.கே. சிவகுமார் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் சித்தராமையா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிக வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Siddaramaiah and Sivakumar visits Delhi for Karnataka CM selected


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->