தலைவர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் - 5 மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு சோனியாகாந்தி உத்தரவு.!
Sonia Gandhi orders resignation of 5 state Congress leaders
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், அந்தந்த மாநில தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. மேலும், ஆட்சியில் இருந்த பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை இழந்துள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற உத்திரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மணிபூர் ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளதாக தலைமை செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். மேலும், கட்சியின் மறுசீரமைப்பு செய்யவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.
English Summary
Sonia Gandhi orders resignation of 5 state Congress leaders