#BigBreaking || 16 எம்எல்ஏ..களுக்கு தகுதி நீக்க நோட்டிஸ் அனுப்பிய சபாநாயகர்.!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியை சேர்ந்த 16 அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கும் துணை சபாநாயகர்  தகுதி நீக்க நோட்டீசை பிறப்பித்துள்ளார்.

சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள், ஏகநாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர். இதன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்த நேரத்திலும் சிவசேனாவின் தலைமையிலான ஆட்சி கவிழும் சூழல் நிலவிவருகிறது.

மேலும் சிவசேனா கட்சியின் தொண்டர்கள் தெருக்களில் இறங்கி போராட தயாராகி வருவதாகவும், இதேபோல் உத்தவ் தாக்கரேவின் ஆதரவாளர்களும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு தற்போது வாபஸ் பெற்றிருப்பதால், மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தானே, மும்பை நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் தங்கியுள்ள ஏக்நாத் ஷிண்டே மற்றும் 16 எம்எல்ஏக்களுக்கு, தற்போது துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நோட்டீஸ்-க்கு 16 எம்எல்ஏக்களும் தங்கள் தரப்பில் இருந்து வருகின்ற 27ம் தேதிக்குள் எழுத்து பூர்வமாக விளக்கம் தர வேண்டும். அப்படி தரவில்லை என்றால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றம் காரணமாக, மும்பையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் 144 தடை உத்தரவை மாநகர காவல்துறை பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Speaker sends disqualification notices to 16 MLAs


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->