இலங்கை அரசியலில் புதிய திருப்பம்.. அதிபர் கோத்தபய ராஜபக்ச அறிவிப்பு.!!
Srilanka President calls for all party cabinet
இலங்கையில் தற்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை கூட விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்கள் நடத்த இருந்த நிலையில் இலங்கை அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனிடையே, பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது. இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கை அரசியலில் புதிய திருப்பமாக அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் பொதுமக்களின் கிளர்ச்சி வெடித்துள்ள நிலையில் நடவடிக்கை எடுத்துள்ளார்.
English Summary
Srilanka President calls for all party cabinet