பிரதமர் மோடியை சந்தித்த ஸ்டாலின்.. சிறப்பு பரிசு.. பெட்டியில் இருந்த சீக்ரெட் இது தான்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லிக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்றிருக்கும் துணை குடியரசு தலைவர் ஜெகதீஷ் தன்கரை முதலில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். 

அதன்பின்னர், தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து நீட் விலக்கு மசோதா குறித்து வலியுறுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டார். 

இந்நிலையில், தொடர்ந்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழகத்தின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்த அவர் தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, தமிழகத்தின் தானியங்கள் அடங்கிய பெட்டியை பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் பரிசாக கொடுத்துள்ளார். இதற்கான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin Meets pm modi with some special gift


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->