15 லட்சம் பேரை சென்றடைந்த பரபரப்பு ட்விட்.. மோடியை போட்டு தாக்கிய சுப்பிரமணிய சுவாமி..!!
Subramaniasamy criticizes PM Narendra Modi
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மேற்குவங்க மாநிலம் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளான சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் தற்போது வரை 275 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டையே உலுக்கிய இந்த கோர சம்பவத்திற்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியசாமி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "இப்போது நமக்குத் தெரியும்: தண்டவாளத்தில் செல்லும் ரயிலுக்குப் பறந்து செல்லும் வேகம் தடங்களில் ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது. ஏனெனில் அந்தத் தடங்கள் மெதுவான ரயிலுக்கானது. எனவே பிரதமரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் ரயில் மந்திரி பதவி விலக வேண்டும்.
திறமையற்ற அல்லது திறன் இருந்தும் பொருத்தமற்ற முதுகெலும்பில்லாத சேலாக்களை அமைச்சர்களாக நியமிப்பதில் மோடி உலகப் புகழ்பெற்றவர். அதற்கு அவரே விலை கொடுக்கிறார். திறமையற்ற ஆனால் விசுவாசமான சேலாவின் தலைவராக மணிப்பூர் மற்றொரு உதாரணம்" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சுப்பிரமணிய சுவாமியின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது வரை 15 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. சமீபகாலமாக பிரதமர் நரேந்திர மோடியை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பாஜகவுக்கு அடங்காமல் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Subramaniasamy criticizes PM Narendra Modi