சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய அதிரடி தடை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
supreme court order for chennai hc tngovt case
நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக, தமிழக அரசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க, கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
மேலும், நீர் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்ததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.
இந்த நிலையில், இது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்து ஒரு வழக்கில் சற்று முன்பு உச்சநீதிமன்றம் ஒரு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில், தமிழ்நாடு அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக, தமிழக அரசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
supreme court order for chennai hc tngovt case