திமுக அமைச்சர் சம்மந்தமான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க மறுத்து சென்னை சிறப்பு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. இதனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து தற்போது உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பலரிடம் மோசடி செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் அனைத்தும் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் செந்தில்பாலாஜிக்கு எதிரான டிஜிட்டல் உள்ளிட்ட ஆதார ஆவணங்களை வழங்க வேண்டும் என்று தமிழக போலீசாருக்கு உத்தரவிட கோரி, அமலாக்கப்பிரிவு துறை இயக்குனர் தரப்பில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரணை செய்த சிறப்பு நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிக்கை நகல்களை வழங்க உத்தரவிட்டது. அதே சமயத்தில் குறியீடு செய்யப்படாத ஆவணங்களை வழங்க முடியாது என்றும் உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பில் சான்றளிக்கப்பட்ட குறியீடு செய்யப்படாத ஆவணங்களை வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும் அந்த தீர்ப்பில், ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர் நகல் வழங்க கோரி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு மனு தாக்கல் செய்யலாம் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக கரூரை சேர்ந்த எம் கார்த்திகேயன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், அமலாக்கத்துறைக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court Order to Senthil Balaji case April


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->