உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
Supreme Court order to UP Chief Minister Yogi Adityanath case
யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தவிட்டுள்ளது!
உத்தர பிரதேச முதலமைச்சர், யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
யோகி ஆதித்யநாத், கடந்த 2007-ஆம் ஆண்டு கோரக்பூா் எம்.பி.யாக பதவி விகித்தபோது, அவரது பேச்சு இரு தரப்பினரிடையே பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடைபெற காரணமாக இருந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, கடந்த 2018-ஆம் பிப்ரவரி மாதம் இந்த வழக்கு உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கு விசாரணையிலும், யோகி ஆதித்தயநாத் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதிலும் எவ்வித நடைமுறை தவறும் இல்லை என்று உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா, விசாரணைக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது தலையிட வேண்டியது தேவையற்றது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
English Summary
Supreme Court order to UP Chief Minister Yogi Adityanath case