#BREAKING || ஜாமீன் வழக்கு.. கை விரித்த நீதிமன்றம்.. "ஜூலை 10க்கு" ஒத்தி வைப்பு.!! குஷியில் ED தரப்பு - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அமலாக்கு துறை தரப்பில் மத்திய அரசு வழக்கறிஞர் வேறொரு வழக்கில் வாதிடுவதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென அமலுக்காத்துறை கோரிக்கை விடுத்தது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜியின் திறப்பு குறைந்தபட்சம் நாளைய தினம் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியது. 

அப்போது இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.ஓகா‌ செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கை விசாரணைக்க இன்று சாத்தியமில்லை. உங்கள் தரப்பு வாதங்களை மட்டுமே கேட்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அமலாக்கத்துறை திறப்பு வாதங்களை கேட்காமல் ஜாமின் மனுவை விசாரிக்க முடியாது.

எனவே ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை ஜூலை 10 அன்று பட்டியலிடப்படும் என கூறி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்ததோடு எங்களுக்கு அனுபவம் இருக்கிறது, நாங்கள் உங்கள் பேச்சை கேட்கலாம். ஆனால் உச்ச நீதிமன்றம் விடுமுறையில் இருக்கும்போது வேற வழி இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இதனால் செந்தில் பாலாஜி தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme court Postponed Senthil Balaji bail petition hearing on July 10


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->