பெண்களின் ஆதரவு எனக்குத்தான்.. தமிழச்சி தங்கபாண்டியன் நம்பிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவை பொதுத் தேர்தல் கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வேட்பாளருக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் இந்த வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வடைகிறது. இந்த நிலையில் தென் சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் இந்த மக்களவை பொதுத் தேர்தல் பெண்களின் ஆதரவு எனக்கு தான் என நம்பிக்கை உடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

தென் சென்னை பகுதியில் வாக்கு சேகரித்த தமிழச்சி தங்கபாண்டியன் தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியின் போது "நான் எப்போதும் மக்களுடன் நேரடியாக இருக்கிறேன். பலதரப்பட்ட பெண்கள் இந்த ஆட்சிக்காகவும் எனக்காகவும் அன்பை தெரிவிக்கின்றனர். 

இது இது மனதிற்கு திருப்தி அளிக்கிறது. எங்களுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. களத்தில் பெண்களுக்கான ஆதரவு எனக்குத்தான் உள்ளது" என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilachi Thangapandian hope women support belongs to me


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->