ஓட்டு கேட்டுவந்த தமிழச்சி தங்கப்பாண்டியன்..அடிவெளுத்த திமுகவினர்!!
Tamilachi Thangapandian..who was asking for votes
மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது.இம்முறை தமிழ்நாட்டில் மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக,தமாக,அமமுக உள்ளிட்ட கட்சிகளும் , காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியில் திமுக,விசிக,உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக தலைமையில் தேமுதிக இடம்பெற்றுள்ளது.நாம் தமிழர் கட்சி தனித்துக்களம் காண்கிறது.
இந்நிலையில்,தற்போதைய தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளருமான தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில், நேற்று மாலை 176வார்டுக்கு வாக்கு சேகரிக்கச்சென்றுள்ளார். அதற்கான முழுஏற்பாட்டைத்தையும் 176 வார்டு திமுக வட்டசெயலாளர் முருகவேல் செய்துள்ளார். சிறப்பான முறையில் வரவேற்பு தந்து வேட்பாளரை வழி அனுப்பிவைத்துள்ளார் வட்டசெயலாளர் முருகவேல்.
இதனை,பொறுத்துக்கொள்ள முடியாத 176 வார்டு திமுக நிர்வாகிகள் முருகவேலை மிரட்டியுள்ளனர்.இரவு தனியாக வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த வட்டசெயலாளரை வெங்கடேஸ்வரா நகர் ஐந்தாவது தெருவில் வழிமறித்த 30 பேர்கொண்ட திமுக நிர்வாகிகள் முருகவேலுவை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அவரது மனைவியும் 175 வார்டு மாமன்ற உறுப்பினருமான மகேஸ்வரி பேசுகையில்'
" நான் 175 வார்டு திமுக மாமன்ற உறுப்பினர். என் கணவர் 176வது வார்டு திமுக வட்டச் செயலாளராக உள்ளார் . தேர்தலில் முன்னிட்டு வாக்கு சேகரிக்க திமுக எம்பி வந்ததால் அவருக்கு சிறப்பான முறையில் நல்ல வரவேற்பை தந்தார் என் கணவர்.அதனை பிடிக்காதவர்கள்,இரவு தனியாக வந்துகொண்டிருந்த என் கணவரை வெங்கடேஸ்வரா நகர் ஐந்தாவது தெரு வழிமறைத்து அடித்து காயப்படுத்திள்ளனர்.
ஒரு மாமன்ற உறுப்பினர் கணவருக்கே இப்படி நடக்கிறது என்றால் பொதுமக்கள் என்ன செய்வார்கள். இதுகுறித்து, அந்த நிர்வாகிகளிடம் கேட்டபோது எனது கார் கண்ணாடிகளை உடைத்து விட்டனர். என் கணவர் சிறு வயது முதலே திமுகவில் கஷ்டப்பட்டு படிப்படியாக வளர்ந்து வட்ட செயலாளராக இருக்கிறார்."
176 வது வட்ட நிர்வாகிகள் குட்டி,பிரபு என்பவர்கள் சம்பவத்தில் முக்கியமானவர்கள். இது குறித்து மாமன்ற உறுப்பினர் மகேஸ்வரி காவல்துறையின் புகார் அளிக்கப்பட்டுள்ளார்.அவரது கணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வட்ட செயலாளருக்கும் அந்த வட்டத்தின் திமுக நிர்வாகிகளுக்கும் ஆறு மாதமாகவே சிறு சிறு பிரச்சனைகள் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இரண்டு திமுக நிர்வாகிகளுக்குள் நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
இச்சம்பவம் குறித்து மாமன்ற உறுப்பினர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
English Summary
Tamilachi Thangapandian..who was asking for votes