தமிழக வெற்றிக் கழகம்: ஆகஸ்ட் 22ம் தேதி த.வெ.க கட்சி கொடி அறிமுகம்! - Seithipunal
Seithipunal


த.வெ.க கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் மாதம் நடத்த திட்டம்.பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்.

தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை வரும் ஆகஸ்ட்  22ம் தேதி விஜய் கட்சி கொடியை அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முன்கூட்டியே விஜய் கட்சியின் கொடியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளின் முன்னிலையில் கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கட்சியின் கொடி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கட்சியின் அடிப்படை கொள்கைக்கு ஏற்ப மக்களை ஒன்றுபடுத்தும் வகையில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது கடைசி படத்தில் நடித்து முடித்த பிறகு, முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilaga Vettri Kazhagam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->