நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில்!
TB Assembly 2025 MK Stalin vs EPS ADMK NEET
நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் எங்களுக்கு (தமிழக அரசுக்கு) இல்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், "நீட் தேர்வு ரத்து செய்யப்பபடும் என கூறினீர்கள். ஏன் பண்ணவில்லை என்று கொல்வி எழுப்பினார்.
அதற்க்கு பதிலளித்த முதலமைச்சர், இப்போதும் நிச்சயமாக சொல்கிறோம். எங்கள் கருத்தில் மாற்றம் இல்லை. நீட் தேர்வை ரத்து செய்வதுதான் எங்கள் வேலை. ஆனால் அந்த அதிகாரம் எங்களுக்கு இல்லை. மத்திய அரசிடம் உள்ளது.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு விலக்கு இருக்கும் என ராகுல் காந்தி கூட கூறியிருந்தார். நாங்கள் இருந்தவரையில் நீட் தேர்வு இல்லை. நீங்கள் வந்த பிறகுதான் நீட் தேர்வு உள்ளே வந்தது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டது நீங்கள் இருந்த ஆட்சிதான் என எடப்பாடி பழனிசாமி தெரிவிக்க, தவறான கருத்தை பதிவு செய்ய வேண்டாம். நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் நீட் தேர்வை ஏற்கவில்லை. வரவும் விடவில்லை என்று முதலமைச்சர் பதில் கொடுத்தார்.
"இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் வாய்ப்பு குறைந்துபோய்விட்டது. நீங்கள் நூற்றாண்டு நாணயம் வெளியிடும்போது பாஜக அமைச்சரை அழைத்து வெளியிட்டீர்கள். நீங்கள் இரட்டை வேடம் போடுகிறீர்கள்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நீங்கள் நான்கு வேடம் போடுபவர்கள். அது கட்சி நிகழ்ச்சி அல்ல, அரசு நிகழ்ச்சிதான். ஒன்றிய அமைச்சராக உள்ளவரை அழைத்து வெளியிட்டோம். அதில் என்ன தவறு உள்ளது என்று முதலமைச்சர் பதில் கேள்வி எழுப்பி அமர்ந்தார்.
மேலும், அமைச்சர் துரை முருகன், அதிமுகவினர் வெளிநடப்பு செய்ய தயாராக வந்துள்ளனர் என்றார்.
English Summary
TB Assembly 2025 MK Stalin vs EPS ADMK NEET