#BigBreaking || பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றவாளி முகமது யாசின் மாலிக்-க்கு ஆயுள்தண்டனை.! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீா் பிரிவினைவாத தலைவா் முகமது யாசின் மாலிக் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட வழக்கில்,  குற்றவாளி என்று டெல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இன்று அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுதல், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சதித் திட்டம் தீட்டுதல், பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருத்தல், குற்ற சதி, தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் யாசின் மாலிக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் அனைத்தும் கடந்த மே 10ஆம் தேதி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் நான் எதிா்ப்பு தெரிவிக்கப் போவதில்லை’ என்று யாசின் மாலிக் பதிலளித்தார்.

இதையடுத்து, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி என்று டெல்லி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், தண்டனை விவரங்கள் குறித்து இன்று (மே 25ஆம் தேதி) அறிவிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், சற்றுமுன் குற்றவாளி யாசின் மாலிக்-க்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

terrorist activities Mohammad Yassin Malik life imprisonment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->