பயங்கரவாதிகளை கொல்லக்கூடாது!...பாஜக - உமர் அப்துல்லா இடையே வெடித்தது மோதல்! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நேற்று பாதுகாப்பு படை வீரர்களால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் புதிதாக பொறுப்பேற்றுள்ள  பரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், பயங்கரவாதிகளை விசாரிப்பதன் மூலம் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்படுபவர்கள் குறித்த தகவல்களை பெற முடியும் என்றும், ஜம்மு காஷ்மீரில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், பயங்கரவாதிகள் உயிருடன் பிடிபட்டால் விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

இதனால் பயங்கரவாதிகளை கொல்லப்படக்கூடாது என்றும், அவர்களை உயிருடன் பிடித்து அவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று விசாரிக்க வேண்டும் என்றும், உமர் அப்துல்லா அரசை சீர்குலைக்க முயற்சிக்கும் ஏஜென்சி இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பரூக் அப்துல்லாவின் இந்த பேச்சிற்கு பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrorists should not be killed clash broke out between bjp and omar abdullah


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->