பாஜக-க்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி - பிரதமர் மோடி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் 7 கட்டங்களாக நடைபெறும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அதான் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குபதிவு நேற்று நடைபெற்றது. இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் 88 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

இன்று வாக்களித்த முதன்முறை வாக்காளர்கள் இந்தியா முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கின்றனர் என்பது தெளிவாகிறது.இரண்டாம் கட்ட வாக்குபதிவு மிகவும் நன்றாக இருந்தது. இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றி.

தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் நல்லாட்சியை வாக்காளர்கள் விரும்புகிறார்கள். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியை இளைஞர்கள், பெண்கள் வலுப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு மோடி தனது ‛எக்ஸ்’ தளத்தில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanks to bjp voters by modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->