விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு..அரசியல் மோசடி மாநாடு! கொந்தளித்த எச்.ராஜா! - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு, அரசியல் மோசடி மாநாடு தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறந்தவர்கள் தான் மூட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா, இன்று நிருபர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறந்தவர்கள் தான் மூட வேண்டும் என தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது :

"மத்திய அரசு மதுக்கடைகளை மூடுவதில் ஈடுபடாது. அதற்கு பதிலாக, மதுக்கடைகள் திறந்து வைத்தவர்கள் மட்டுமே அவற்றை மூட வேண்டும். இதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு, அரசியல் மோசடி மாநாடு என்றார். 

மேலும், "இந்த மாநாடு மக்களை ஏமாற்றும் முயற்சியாகும்" என்றார். அவர், அறநிலையத்துறை புனரமைப்பு செய்த கோவில்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதன் அடிப்படையில், கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 15 சதவீத வாக்குகளை இழந்துள்ளதைக் குறிப்பிடினார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாதையில் அ.தி.மு.க. செல்கிறதா என்பதை அக்கட்சி தொண்டர்கள் யோசிக்கிறார்கள்" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The anti alcohol conference conducted by vck is a political fraud conference HRaja


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->