குடும்ப வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் இடையே நடக்கும் யுத்தம் - அமித் ஷா
The battle between family development and country development Amit Shah
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு, நீட், க்யூட் போன்றவைகள் இடம் பெற்றுள்ளது. மகாலட்சுமி திட்டத்தின் கீழ் மறுமையில் ஆடும் ஏழை குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.8,500 என ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்கு பதிவுகள் நிறைவடைந்து நான்காம் கட்ட வாக்கு பட்டியலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகியுள்ளது.
அந்த வகையில், தெலுங்கானா மாநிலத்தில் பிரச்சரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில்,ராகுலின் வாக்குறுதிக்கும் மோடியின் வாக்குறுதிக்கும் இடையே நடக்கும் தேர்தல் இது. நாட்டில் காங்கிரஸ் நிலைமை கவலை கிடமாகவும் பரிதாமாகவும் இருக்கிறது. காங்கிரஸ்க்கு பல தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களே இல்லை.தெலுங்கானவில் பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்து ஒரு வாக்குறுதியை கூட காங்கிரஸ் நிறைவேற்றவில்லை.
இந்தியாவில் மூன்றுகட்ட தேர்தல் முடிந்துள்ளது. இதில் மட்டுமே மோடி தலைமையினால பாஜக 200 இடங்களுக்கு மேல் கைப்பற்றும். தெலுங்கானா மாநிலத்தில் பாஜக பத்தி இடங்களை கைப்பற்றும். இது ராகுலின் குடும்ப வளர்ச்சிக்கும் மோடியின் நாட்டு வளர்ச்சிக்கும் நடைபெறும் யுத்தம் இந்த தேர்தல் என்று பேசினார்.
English Summary
The battle between family development and country development Amit Shah